ஆண்களே அடர்த்தியாக தாடி வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

By Kanimozhi Pannerselvam
12 May 2025, 07:45 IST

ஊட்டச்சத்துமிக்க உணவுகள்

பயோட்டின், துத்தநாகம், வைட்டமின் டி, இ, பி6, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்.

ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க, மீன், முட்டை, வேர்க்கடலை, எள் போன்ற உணவுகளை உட்கொள்ளவும்.

தூக்கம்

போதுமான தூக்கம் உடலுக்கு மிகவும் முக்கியம். போதுமான தூக்கம் இல்லையெனில், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையலாம்.

மசாஜ்

தாடி மற்றும் அதற்குக் கீழே உள்ள தோலை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து தாடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

முகத்தை சுத்தப்படுத்துதல்

முகத்தை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இது தோலில் உள்ள அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் மாசுகளை நீக்க உதவுகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மயிர்க்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம் இருக்கும் போது உடலில் கார்டிசோல் அதிகரிக்கிறது. இது உங்கள் டெஸ்ட்டோஸ்ட்ரான் ஹார்மோன் வளர்ச்சியில் குறைபாடை உண்டாக்குகிறது.