ஆண்களே! உங்க இதயம் ஸ்ட்ராங்கா இருக்க இதை செய்யுங்க

By Gowthami Subramani
27 Jan 2025, 07:48 IST

இருதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியம். குறிப்பாக, ஆண்களுக்கு இதய நோய் தொடர்பான சிக்கல்களைக் குறைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆண்களின் இதய ஆரோக்கியத்திற்கான குறிப்புகளைக் காணலாம்.

வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல், விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற மிதமான தீவிர உடற்பயிற்சியை ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் செய்ய வேண்டும். இது உடற்தகுதியை பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது

இதய ஆரோக்கிய உணவுகள்

நிறைவுற்ற, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் சோடியம் உணவுகளைத் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெல்லிய புரதங்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், கொழுப்பு நிறைந்த மீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

சீரான உடல் எடை பராமரிப்பு

அதிக உடல் எடை இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இதய நோய்க்கான ஆபத்து காரணிகளில் உயர் இரத்த அழுத்தம் முக்கியமானதாகும். எனவே இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்துக் கண்காணிப்பதன் மூலம், அதை கட்டுப்படுத்த முடிய்ம். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

புகைபிடிப்பதை தவிர்ப்பது

புகைபிடித்தல் இதய நோய்க்கான முக்கிய காரணியாகும். எனவே புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

நாள்பட்ட மன அழுத்தம் இதய பிரச்சனைகளுக்கு பங்களிக்கிறது. எனவே, தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் போன்ற மன அழுத்த நுட்பங்களைக் கையாள்வது மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை நிறுவுவதன் மூலம் தளர்வு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தலாம்