ஆண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைக்கு அத்திப்பழம் ஒன்னு போதும்

By Gowthami Subramani
08 Mar 2024, 09:32 IST

உலர் பழங்கள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அந்த வகையில் அத்திப்பழம் சாப்பிடுவது ஆண்களுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்பது குறித்து காண்போம்

ஜிங்க் குறைபாட்டை நீக்க

அத்திப்பழத்தைத் தினமும் உட்கொள்வது உடலில் ஏற்படும் ஜிங்க் குறைபாட்டை நீக்கலாம்

டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த

அத்திப்பழத்தில் நல்ல அளவிலான துத்தநாகம் நிறைந்துள்ளது. இது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவுகிறது

சகிப்புத் தன்மை அதிகரிக்க

அத்திப்பழத்தை தினசரி உணவில் எடுத்துக் கொள்வது உடலில் ஆற்றலை அதிகளவில் திறம்பட செயல்பட உதவும்

ஆரோக்கியமாக இருக்க

அத்திப்பழத்தை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துகிறது. மேலும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது

சரியான அளவில் உட்கொள்வது

ஆண்களுக்கு அத்திப்பழங்கள் பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், சரியான அளவில் உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

எத்தனை சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு 2 அத்திப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதை விட அதிகமாக அத்திப்பழங்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்