ஆண்களுக்கு பேரீச்சம்பழம் தரும் அற்புத நன்மைகள்

By Gowthami Subramani
13 Jul 2024, 12:20 IST

உடல் ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழம் மிகுந்த நன்மை பயக்கும். ஆண்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல்வேறு வழிகளில் நன்மை தருகிறது. இதில் ஆண்களுக்கு பேரீச்சம்பழம் தரும் நன்மைகளைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், கலோரிகள், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஆண்கள் பேரீச்சம்பழத்தை உட்கொள்வதால், செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல்லைக் குறைக்கவும் உதவுகிறது

எலும்புகளை வலுவாக்க

பேரீச்சம்பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல்வேறு எலும்பு பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உதவுகிறது

முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு

பேரீச்சம்பழத்தில் வைட்டமின் சி, டி மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முடி மற்றும் சருமத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது

விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பு

ஆண்கள் பேரீச்சம்பழத்தை உட்கொள்வது, அவர்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்கலாம். இதற்கு இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் எஸ்ட்ராடியோல் போன்றவையே காரணமாகும்

நீரிழிவு நோய்க்கு

பேரீச்சம்பழத்தில் மிகவும் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடுகள் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது

மூளை ஆரோக்கியத்திற்கு

பேரீச்சம்பழத்தில் வைட்டமின் பி மற்றும் கோலின் போன்றவை உள்ளது. இது கற்றல் மற்றும் நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, அல்சைமர் போன்ற நரம்பியல் கடத்தல் நோய்களின் அறிகுறிகளைக் குறைக்க பேரீச்சம்பழம் உதவுகிறது