புகைபிடிப்பதை நிறுத்த அசத்தலான வீட்டு வைத்தியம் இங்கே

By Ishvarya Gurumurthy G
31 May 2024, 08:30 IST

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். இந்த தினத்தை முன்னிட்டு புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை தெரிந்து கொள்வோம்.

அபாயம்

புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது ஆஸ்துமா, காசநோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால் பலர் பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

மன நிலை

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி புகை பிடிக்கும் ஆசை ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் விரும்பினாலும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட முடிவதில்லை. நீங்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட விரும்பினால், முதலில் உங்கள் மன உறுதியை வலுப்படுத்துங்கள்.

முலேத்தி

முலேத்தி புகைபிடிப்பதை நிறுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் மிதமான இனிப்புச் சுவை சிகரெட் மீதான ஏக்கத்தைக் குறைக்க உதவும். இதில் உள்ள பண்புகள் சோர்வை நீக்கி ஆற்றலை அதிகரிக்க உதவும். உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம், உங்கள் வாயில் முலேத்தியை வைத்துக் கொள்ளுங்கள்.

இலவங்கப்பட்டை

புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். வைட்டமின்கள், புரதம், சோடியம், தயாமின், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இலவங்கப்பட்டையில் காணப்படுகின்றன. அதன் கடுமையான மற்றும் கசப்பான சுவை சிகரெட் ஆசையை குறைக்கிறது.

தேன்

தேனை உட்கொள்வது புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது. தேனில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை சிகரெட்டுக்கான ஏக்கத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பினால், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வரவும். இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

தண்ணீர்

புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடவும் தண்ணீர் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். உண்மையில், தண்ணீர் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் மூலம், வளர்சிதை மாற்ற விகிதம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புகைபிடிக்கும் பழக்கமும் படிப்படியாக விலகத் தொடங்குகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை உட்கொள்வது சிகரெட்டை நிறுத்துவதற்கு உங்களுக்கு பெரிதும் உதவும். இதற்கு இஞ்சி மற்றும் நெல்லிக்காயை சம அளவு எடுத்து, தட்டி காயவைக்கவும். அதனுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும். எப்போதெல்லாம் சிகரெட் பிடிக்க நினைக்கிறீர்களோ, அப்போதெல்லாம் இந்தப் பொடியை உட்கொள்ளுங்கள்.

இந்த வீட்டு வைத்தியம் புகைபிடிப்பதை நிறுத்த உங்களுக்கு உதவும். சிகரெட் பிடிப்பது உங்கள் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த பழக்கத்தை இன்றே விட்டுவிடுங்கள்.