மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய்களின் தாக்கங்கள் அதிகரித்தே காணப்படும். இதற்கு மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களே காரணமாகும்
கொசுக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே கொசுக்களைத் தவிர்க்க இயற்கையாக வீடுகளில் சில தாவரங்களை வளர்க்கலாம்
துளசி
இந்த நறுமண மூலிகை ஈரப்பதமான காலநிலையில் செழித்து வளரும். இதன் வலுவான வாசனை கொசுக்களை விரட்ட உதவுகிறது
சிட்ரோனெல்லா
இது மெழுகுவர்த்திகள் மற்றும் ஸ்ப்ரேக்கள் போன்ற கொசு விரட்டும் பொருட்களில் பயன்படுத்தப்படும் தாவரமாகும். இது அத்தியாவசிய எண்ணெயின் சிறந்த மூலமாகும்
பூண்டு
நொறுக்கப்பட்ட பூண்டு பற்களில் சக்திவாய்ந்த அல்லிசின் கலவை நிறைந்துள்ளது. இதன் கடுமையான வாசனையானது கொசு விரட்டியாக செயல்படுகிறது
கேட்னிப்
இது கேட்மின்ட் என்று அழைக்கப்படுகிறது. இது நறுமணமுள்ள, பிரகாசமான பச்சை இலைகள் மற்றும் சிறிய பூக்களைக் கொண்டுள்ளது. இதன் சிட்ரஸ், எலுமிச்சை வாசனை கொசுக்களை விரட்ட உதவும் சிறந்த தேர்வாகும்
லாவண்டர்
ஊதா நிற பூக்களைக் கொண்ட லாவண்டர் நறுமணமான இலைகளைக் கொண்டுள்ளது. இதன் வலுவான நறுமணம் கொசுக்களை விரட்டுவதற்கு சிறந்த தேர்வாகும்