இயற்கையான கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களிலிருந்து விடுதலை பெறுவதுடன், கொசு சுருள் புகையினால் ஏற்படும் நச்சுக்களிலிருந்து விடுபடலாம்
லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டரின் வாசனை கொசுக்களுக்கு விரும்பத்தகாத வாசனையாகும். எனவே இதன் கலவைகள் கொசு விரட்டிகளாக செயல்படுகிறது
எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய்
இது மிகவும் பயனுள்ள இயற்கையான கொசு விரட்டியாகும். இந்த எண்ணெயில் உள்ள சிட்ரோனெல்லல் என்ற கலவை வலுவான கொசு விரட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது
மிளகுக்கீரை எண்ணெய்
இந்த எண்ணெயில் உள்ள மெந்தோல் என்ற கலவை இயற்கையான பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இது கடியிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன், சருமத்தில் குளிரூட்டும் விளைவைக் கொண்டுள்ளது
கிராம்பு எண்ணெய்
இதில் உள்ள யூஜெனால் கலவை கொசுக்களை விரட்ட உதவும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், இதனை ஒரு கேரியர் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும்
தேயிலை மர எண்ணெய்
இந்த எண்ணெயில் ஆல்பா-டெர்பினோல் மற்றும் டெர்பினென்-4-ஓல் போன்ற கலவைகள் உள்ளது. இவை இயற்கையாகவே கொசுக்களை விரட்ட உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது
சிட்ரோனெல்லா எண்ணெய்
இந்த எண்ணெய் ஆனது எலுமிச்சம்பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதாகும். இதில் உள்ள சிட்ரோனெல்லோல் மற்றும் ஜெரானியால் கொசு விரட்டும் பண்புகளுக்காக அறியப்படுகிறது
வேப்ப எண்ணெய்
இதில் உள்ள அசாடிராக்டின் கொசுக்களின் ஹார்மோன் அமைப்புகளில் தலையிட்டு, அவற்றின் இனப்பெருக்கம் மற்றும் உணவளிக்கும் திறனைக் குறைக்கிறது. இவ்வாறு இயற்கையான கொசு விரட்டிகளில் ஒன்றாக வேப்ப எண்ணெய் அமைகிறது