ஒற்றைத் தலைவலியை நொடியில் விரட்டும் சூப்பர் ஆயில்

By Gowthami Subramani
01 Dec 2024, 20:15 IST

இன்று பெரும்பாலான நேரங்களில் பலரும் மன அழுத்தத்தை சந்திக்கும் நிலை உருவாகிறது. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். இதில் ஒற்றைத் தலைவலியை நீக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்கள் சிலவற்றைக் காணலாம்

அரோமாதெரபி

அரோமாதெரபி என்பது அத்தியாவசிய எண்ணெய்கள் என்றழைக்கப்படும் இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியதாகும். அத்தியாவசிய எண்ணெய்களை மசாஜ், மேற்பூச்சி அல்லது பரவல் போன்ற பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது

ரோஸ்மேரி எண்ணெய்

இந்த அத்தியாவசிய எண்ணெய் அதன் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் சிறந்த வலி நிவாரணி பண்புகள் நிறைந்துள்ளது

கெமோமில் எண்ணெய்

இது ஒரு அற்புதமான சக்திவாய்ந்த அத்தியாவசிய எண்ணெய் ஆகும். இவை பதட்டம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளைக் குறைக்க உதவுகிறது. ஒரு குளியல் அல்லது சூடான நீரில் சில துளிகள் கெமோமில் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து நீராவியை உள்ளிழுக்க வேண்டும்

லாவண்டர் எண்ணெய்

லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயை உள்ளிழுப்பதன் மூலம் பலர் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது

யூகலிப்டஸ் எண்ணெய்

இது மிகவும் பிரபலமான அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும். இது கனமான தலை அல்லது ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற வழிவகுக்கிறது

பெப்பர்மிண்ட் எண்ணெய்

மிளகுக்கீரை எண்ணெயில் மெந்தோல் உள்ளது. இது குளிர்ச்சியான உணர்வைக் கொண்டுள்ளது. சிறிது மிளகுக்கீரை எண்ணெயுடன் சிறிது தேங்காய் எண்ணெயை நீர்க்கச் செய்து பயன்படுத்துவது தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது