சர்க்கரை நோயாளிகள் எந்த உலர் பழங்களை சாப்பிடலாம்?

By Karthick M
28 Feb 2024, 15:25 IST

நீரிழிவு நோய் பிரச்சனை

நீரிழிவு நோய் என்பது அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது. இதை கட்டுப்படுத்த பலர் பல வழிகளை மேற்கொள்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உலர் பழங்களை பார்க்கலாம்.

பாதாம்

பாதாமில் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு நன்மை பயக்கும்.

வால்நட்

நார்ச்சத்து நிறைந்த வால்நட் சாப்பிடுவது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

நிலக்கடலை

வேர்க்கடலையை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இது வகை 2 நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள்.

பிஸ்தா

சர்க்கரை நோய் இருந்தால் பிஸ்தா சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

முழுமையாக படித்ததற்கு நன்றி

முந்திரி போன்ற நட்ஸ் வகைகளையும் ஊறவைத்து சாப்பிடலாம். இருப்பினும் உங்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.