முத்து போன்ற பற்களை பெற இவற்றை மென்று சாப்பிடுங்க!

By Devaki Jeganathan
13 Mar 2024, 14:31 IST

முத்து போன்ற வெண்மையாக பளபளக்கும் பற்கள் நமக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. அதே நேரத்தில், உங்கள் பற்கள் மஞ்சள் அல்லது அழுக்காக இருந்தால், அது உங்களை சங்கடப்படுத்தலாம். தினமும் பல் துலக்கிய பிறகும் உங்கள் பற்கள் அழுக்காக இருந்தால், சமையலறையில் வைத்திருக்கும் மசாலாப் பொருட்களை மென்று சாப்பிட வேண்டும்.

அதிமதுரம்

ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிமதுரத்தில் காணப்படுகின்றன. இது பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் அவற்றின் மஞ்சள் நிறத்தையும் குறைக்கிறது.

எப்படி உபயோகிப்பது?

முத்து போல் பளபளக்கும் பற்களுக்கு, தினமும் அதிமதுரப் பொடியைக் கொண்டு பல் துலக்கலாம். அதுமட்டுமின்றி, அதை மென்று சாப்பிடுவதும் பற்களை சுத்தம் செய்யும்.

கிராம்பு

கிராம்பு பற்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், வாய் துர்நாற்றம் முதல் பற்களின் மஞ்சள் நிறம் வரை அனைத்தையும் அகற்றலாம்.

எப்படி உபயோகிப்பது?

கிராம்புகளுடன் பற்களை பிரகாசமாக்க, பேக்கிங் சோடாவில் கிராம்பு பொடியை கலக்கவும். இந்த கலவையை தினமும் பல் துலக்கினால் வித்தியாசம் தெரியும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கும், உங்கள் நிறத்திற்கும் ஒரு மருந்தாகும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான மற்றும் அழகான பற்களைப் பெறலாம்.

எப்படி உபயோகிப்பது?

இதற்கு இலவங்கப்பட்டை பொடியில் வேப்பம்பூ மற்றும் புதினா பொடியை கலந்து கொள்ளவும். இதை தினமும் காலையிலும் மாலையிலும் துலக்குங்கள். இதனால் அழகான பற்கள் கிடைக்கும்.

வெள்ளை பற்கள் பெறுவது எப்படி?

வெள்ளை பற்களுக்கு, உலர்ந்த வேப்பம்பூ மற்றும் புதினா இலைகள், இலவங்கப்பட்டை தூள், அதிமதுரம், கல் உப்பு மற்றும் கிராம்பு தூள் கலவையை உருவாக்கவும். இதை தினமும் துலக்கினால் வித்தியாசம் தெரியும்.