பத்து நிமிடத்தில் பல் வலியைப் போக்க ஈசியான வீட்டுவைத்தியங்கள்!

By Kanimozhi Pannerselvam
10 Mar 2024, 18:54 IST

வெந்நீர் + கல் உப்பு

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் பல்வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இதனை பல் வலி ஏற்படும் நாளான்று 4 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

லவங்க எண்ணெய்

பருத்தி பஞ்சில் கிராம்பு எண்ணெய்யை நனைத்து, வலி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவ வேண்டும். இது சில நிமிடங்களிலேயே நல்ல பலனைக் கொடுக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா பல் வலியைப் போக்க உதவும். உங்கள் வழக்கமான பற்பசையுடன் பேக்கிங் சோடாவை கலந்து வலியுள்ள பல்லில் நேரடியாக தடவவும். இதன் மூலம் சில நிமிடங்களில் வலியிலிருந்து விடுபடலாம்.

ஐஸ் மசாஜ்

பல்வலியைப் போக்க ஐஸ் கட்டியைப் பயன்படுத்தலாம். உங்கள் கையில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து, பல் வலியுள்ள பகுதிக்கு வெளியில் லேசாக அழுத்தி பிடிக்கவும். இது மூளையை அடையக்கூடிய வலி தொடர்பான சமிக்ஞைகளை தடுத்து நிறுத்துகிறது.

புதினா டீ புதினா டீ

உங்களை பல்வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. புதினா டீ தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் சில புதினா இலைகளை சேர்த்து,அது பாதியளவு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீரை மெதுவாக பருகவும். அதனால் கிடைக்கக்கூடிய இளம் சூடு உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆறுதல் அளிக்கும்.