ஆயுர்வேதத்தில் நெய் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள், பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, டி, கே போன்ற தாதுக்கள் உள்ளது. இரவில் இதை வைத்து உள்ளங்கால்களை மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
நிம்மதியான உறக்கம்
உள்ளங்கால்களை நெய் கொண்டு மசாஜ் செய்வதால் மனதிற்கு அமைதியும், உடலுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கும். இதனால் நல்ல தூக்கமும் கிடைக்கும். இது மன அழுத்தத்தை குறைக்கிறது.
குறட்டை பிரச்சனை
தூங்கும் போது குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்கள் தூங்கும் முன் பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சிறந்த செரிமானம்
தேசி நெய் கொண்டு உள்ளங்காலில் மசாஜ் செய்வதால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இது அமிலத்தன்மை, வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
மலச்சிக்கல்
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் உள்ளங்கால்களை நெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.
பொலிவான சருமம்
உள்ளங்கால்களை நெய் கொண்டு மசாஜ் செய்வதால் தோல் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். இது முகத்திற்கு பொலிவைத் தரும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
உள்ளங்கால்களை மசாஜ் செய்வது உடலின் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் வராது.
குதிகால் வெடிப்பு
பாதங்களில் நெய் தடவுவதால் கிடைக்கும் பல நன்மைகளில், மிகப்பெரியது உங்கள் வெடிப்புகளை குணப்படுத்த நெய் உதவுகிறது. இது குதிகால் காயங்களை ஆற்றும்.