பொதுவாக அதிக உணவு உட்கொண்ட பிறகு புளிப்புச் சுவை அல்லது நெஞ்செரிச்சலால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அமில ரிஃப்ளக்ஸ் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதில் நிவாரணத்தை அளிக்கக்கூடிய இந்த எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்
பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிடுவது
உணவுக்குப் பிறகு பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும், வயிற்றை அமைதிப்படுத்தலாம். இவை செரிமானப் பாதையை தளர்த்தி அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது
குளிர்ந்த பால்
ஒரு கிளாஸ் அளவிலான குளிர்ந்த பால் அருந்துவது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் அமில ரிஃப்ளக்ஸிலிருந்து தற்காலிக நிவாரணத்தைத் தருகிறது. செரிமானத்தில் லேசான விளைவை ஏற்படுத்துவதற்கு குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலைத் தேர்வு செய்யலாம்
இஞ்சி தேநீர்
இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இவை உடலில் செரிமானப் பாதையை அமைதிப்படுத்துகிறது. எனவே அசௌகரியத்தைக் குறைக்க உணவுக்கு முன் அல்லது பின் சூடான இஞ்சி டீ அருந்தலாம்
மோர் அருந்துவது
மோரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது வயிற்றுப் புறணியை ஆற்றவும், அமிலத்தன்மையை நடுநிலையாக்கவும் உதவுகிறது. மேலும் இது நிவாரணத்திற்கான குளிர்ச்சி மற்றும் இயற்கையான தீர்வாக அமைகிறது
கற்றாழை சாறு
கற்றாழை சருமத்திற்கு மட்டுமல்ல. அசிடிட்டிக்கும் மிகுந்த நன்மை பயக்கும். கற்றாழை சாற்றை அருந்துவது உணவுக்குழாயைத் தணிக்கவும் எரிச்சலைக் குறைக்கவும் உதவுகிறது
வாழைப்பழம் உட்கொள்வது
வாழைப்பழங்கள் குறைந்த அமிலம் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை வயிற்றில் மென்மையாக இருக்கும். மேலும், இது உணவுக்குழாய் புறணியை மூடி ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது