பல் கூச்சத்தால் அவதிப்படறீங்களா? இதை ட்ரை பண்ணுங்க!

By Devaki Jeganathan
09 Feb 2024, 19:36 IST

பல் கூச்சம் மற்று வலி நம்மால் தாங்க முடியாது. இதனால் நம்மால் சரியாக உணவு கூட சாப்பிட முடியாது. பல் கூச்சத்தை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

உப்பு கலந்த நீர்

பல் மற்றும் வாய் தொடர்பான பிரச்சினைக்கு உப்பு நீர் மிகவும் நல்லது. இது இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எனவே, தினமும் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வாய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் எழுந்தவுடன் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி 20 நிமிடங்கள் கொப்பளித்து வந்தால், பற்கூச்சம் நீங்கும்.

பூண்டு

பூண்டு இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்காலை கொண்டது. மேலும் இதில், ஆண்டி மைக்ரோபிய்ல் பண்பை வெளிப்படுத்தக்கூடியவை. இது வாய் வழி கிருமிகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. தினமும் 1 பூண்டு சாப்பிட்டால் பல் கூச்சம் நீங்கும்.

புதினா

புதினா இலையை எடுத்து அதை நிழலில் நன்றாக காய வைத்து, தூள் உப்புடன் சேர்த்து காலை, மாலை பல் துலக்கினால் இரண்டே நாட்களில் பல் கூச்சம் நீங்கிவிடும்.

வெங்காயம்

வெங்காயமும் பூண்டு போன்று அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது இது பல் கூச்சத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 2 சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டிட்டு வர பல் கூச்சம் நீங்கும்.

கிராம்பு எண்ணெய்

பல் வலி என்றாலே கிராம்பு தான் நியாபகத்திற்கு வரும். பல் வலிக்கு மட்டும் அல்ல, பல் கூச்சத்துக்கும் கிராம்பு எண்ணெய் நல்லது. பல் கூச்சம் உள்ள இடத்தில் கிராம்பு என்னை தடவி வர பல் கூச்சம் நீங்கும்.

கொய்யா இலை

கொய்யா இலைகள் பழங்களை போன்றே பலன் தரக்கூடியவை. கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதன் இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் நீங்கும்.