கோடைக்காலத்தில் அமிலத்தன்மை, வயிறு உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடலாம். இந்நிலையில், கோடையில் வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உடனடி நிவாரணம் பெற சில குறிப்புகளைப் பின்பற்றலாம்
நீரேற்றமாக இருப்பது
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். எனவே நீரிழப்பைத் தவிர்க்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நன்மைகளைப் பெற, அதில் எலுமிச்சை அல்லது வெள்ளரிக்காயைச் சேர்க்கலாம்
லேசான உணவுகள்
தர்பூசணி பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய் காய்கறிகள் போன்ற லேசான, குளிர்ச்சியான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதே சமயம், கோடை காலத்தில் செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கும் கனமான, காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
எலுமிச்சை தண்ணீர்
செரிமானத்தை செயல்படுத்தவும் அமிலத்தன்மையைக் குறைக்கவும் எலுமிச்சை நீரை அருந்தலாம். கோடைக்காலத்தில் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க காலையிலோ அல்லது உணவுக்குப் பின்னரோ இதை குடிக்கலாம்
மூலிகை தேநீர்
இஞ்சி, மிளகுக்கீரை மற்றும் கெமோமில் போன்ற மூலிகைகள் வயிற்று வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே வயிற்று வலி நிவாரணத்திற்காக இதை காலையிலோ அல்லது மதியம் உணவுக்குப் பிறகோ குடிக்கலாம்
தேங்காய் தண்ணீர்
இந்த பானம் எலக்ட்ரோலைட் நிறைந்ததாகும். இது உடலை நீரேற்றமாக வைப்பதற்கு உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தி உடலை குளிர்விக்கிறது. எனவே இது கோடைக்காலத்திற்கு சிறந்த பானமாகும்