இந்த 6 பொருட்கள்.. சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும்..!

By Kanimozhi Pannerselvam
24 Feb 2024, 13:30 IST

டேன்டேலியன்

டேன்டேலியன் ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். இதன் சாறு சிறுநீர் பாதையில் கற்கள் படிவதை தடுக்க உதவுகிறது. இதுசிறுநீரகக் கற்களைக் கரைத்து, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

தண்ணீர்

ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் கரையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கற்களைக் கரைக்க இது ஒரு பயனுள்ள மற்றும் எளிதான வழி என்று கூறலாம்.

துளசி டீ

துளசி டீயில் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியை நீக்குகிறது. அசிட்டிக் அமிலம் சிறிய கற்களைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றனர் நிபுணர்கள்.

ஆப்பிள் சைடர் வினிகர்

சிறுநீரகங்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கிறது.

பால்

பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப் புல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சிறுநீர் பாதையில் கால்சியம் படிவுகளை அகற்ற உதவுகிறது.