தினமும் வேப்பங்குச்சியில் பல் துலக்குவதால் என்னாகும் தெரியுமா?

By Gowthami Subramani
24 Mar 2025, 19:30 IST

பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சிறு சிறு விஷயங்களிலும் கவனம் செலுத்துவது அவசியம். அவ்வாறு பற்களின் ஆரோக்கியத்திற்கு பல் துலக்குதல் மிகவும் இன்றியமையாததாகும். பல் துலக்குதலுக்கு பற்பசைக்கு மாற்றாக வேப்பங்குச்சிகளைப் பயன்படுத்தலாம். இதில் வேப்பங்குச்சியைக் கொண்டு பல் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

மருத்துவ குணங்கள்

வேம்பு ஆனது பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் ஃபிளாவனாய்டுகளைக் கொண்டுள்ளது. இதில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்றவை உள்ளது

வெண்மையான பற்களுக்கு

பற்களுக்கு வேம்பு பயன்படுத்துவது பற்களின் மஞ்சள் கறையை நீக்கி வெண்மையாக மாற்றவும், வேப்ப இலைகளை மெல்லுவதன் மூலம் பற்களை பளபளப்பாக்கவும் வைக்கிறது

துர்நாற்றம் நீங்க

சில ஆரோக்கியற்ற உணவுகளை உட்கொண்ட பிறகு வாயை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பிளேக் போன்ற பாக்டீரியாக்கள் தேங்க வழிவகுக்கிறது. இதற்கு ஒரு சிறந்த தீர்வாக வேப்பங்குச்சியைப் பயன்படுத்தலாம்

பாக்டீரியாவை வெளியேற்ற

நாம் உண்ணும் உணவால் பாக்டீரியாக்கள் வாயின் உள்ளே எளிதில் செல்கிறது. எனவே பாக்டீரியாவைத் தடுக்க, சாதாரண குச்சிகளுக்குப் பிறகு வேப்பங்குச்சி பயன்படுத்தலாம். இது பாக்டீரியாவை எதிர்த்து போராடி அதன் வளர்ச்சியை தடுத்து வாயை சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது

ஈறுகளை வலுப்படுத்த

பற்களுக்கு வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவதன் மூலம் ஈறுகளைப் பலப்படுத்தலாம். மேலும், இது பற்களுக்கு வலுவான அமைப்பை வழங்குகிறது. இது தவிர, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான மற்றும் வலுவான ஈறுகளை உருவாக்கவும் உதவுகிறது

வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த

வேம்பு பல்வேறு ஆரோக்கியமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி, பற்களைத் துலக்குவது வேப்ப எண்ணெயை வெளியிட்டு, வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பற்களை சிறப்பாக சுத்தம் செய்யவும், பிளேக் உருவாவதைக் குறைக்கவும் உதவுகிறது