அசத்தலான 6 நன்மைகளைப் பெற கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்க!

By Kanimozhi Pannerselvam
01 Mar 2024, 18:30 IST

இருமல்

நெஞ்செரிச்சல், இருமல் போன்ற சுவாச நோய்களின் அறிகுறிகளைக் குறைக்கும் ஆற்றல் கற்பூரத்திற்கு உண்டு. ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயில் 4-5 சொட்டு கற்பூர எசன்ஷியல் ஆயில் கலந்து, மார்பில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

பருக்கள்

கற்பூரத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பருக்கள், வீக்கம், சிவத்தல் மற்றும் தோல் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. தேயிலை மர எண்ணெய் மற்றும் கற்பூர எண்ணெயை கலந்து பருக்கள் மீது தடவினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பேன்

கற்பூரத்தில் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியில் தடவவும். இது முடியில் உள்ள பேன்களைக் குறைக்கும்.

தசை வலிகள்

கற்பூரம் கலந்து எண்ணெய்யை தசைகள் மீது மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து மூட்டு வலியைக் குறைக்கும். இதற்கு கற்பூரத்துடன் நல்லெண்ணெய் கலந்து மசாஜ் செய்யவும்.

தோல் அரிப்பு

தோலில் தொடர்ந்து அரிப்பு கொப்புளங்கள், சிவந்து போதல், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், ஆமணக்கு எண்ணெய்யுடன் கற்பூரத்தைக் கலந்து தடவவும்.