உடலில் உள்ள பல உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனினும், கல்லீரலில் நச்சுகள் இருக்கும் போது அதன் ஆரோக்கியம் மோசமடையலாம். இதன் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க சில இயற்கை வழிகள் உள்ளன
ஆரோக்கியமான உணவு
கல்லீரலை சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் நல்ல சுத்தமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
உடற்பயிற்சி
கல்லீரல் செயல்பாடுகளைச் சுத்தப்படுத்தவும், புத்துயிர் பெறவும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இது தவிர, சில யோகாசனங்களை மேற்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
நிறைய தண்ணீர் அருந்துவது
உடலின் முழு சுத்திகரிப்பு செயல்முறையின் முக்கிய பகுதியாக நீரேற்றம் அமைகிறது. நீரிழப்பு காரணமாக கல்லீரலின் செயல்பாடு குறைவதற்கான வாய்ப்புண்டு. எனவே உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேத சிகிச்சையை முயற்சிக்க விரும்புபவர்கள், கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் அபியங்கம் போன்ற வழக்கமான மசாஜ்களை முயற்சிக்கலாம். கல்லீரல் செயல்பாடுகளில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, அதன் மீட்புக்கு ஆதரவளிக்கிறது
நன்கு சிரிப்பது
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிரிப்பு அவசியமாகும். இது கல்லீரலில் உருவாகும் நச்சு வாயுக்களை அகற்ற உதவுகிறது. ஏனெனில், சிரிக்கும்போது, உதரவிதானம் மேலும் கீழும் நகர்கிறது. இது கல்லீரல் சுத்தப்படுத்தவும், அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்கும் உதவுகிறது