உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கா? உடனே சரி செய்ய இந்த ட்ரிங்ஸ் குடிங்க

By Gowthami Subramani
25 Apr 2025, 20:57 IST

ஆஸ்துமா கடுமையானதாக இருப்பின் அது மிகவும் தொந்தரமாக இருக்கலாம். எனினும், சில இயற்கை பானங்களின் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பானங்களை அருந்துவது சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

மஞ்சள் பால்

மஞ்சளில் குர்குமின் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி நிறைந்துள்ளது. இது நுரையீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் பால் தயார் செய்ய சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்கலாம்

தேன் மற்றும் எலுமிச்சை நீர்

தேன் மற்றும் எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது தொண்டை புண்களை நீக்குவதுடன், சளியை வெளியேற்றுகிறது. இது ஆஸ்துமாவால் ஏற்படும் இருமலுக்கு மிகவும் நன்மை பயக்கும்

துளசி நீர்

துளசி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து சூடாக குடிக்க வேண்டும். துளசியின் ஆரோக்கிய பண்புகள் மூச்சுக்குழாய் அடைப்பைப் போக்க உதவுகிறது. இது இயற்கையாகவே சுவாச செயல்பாட்டை மேம்படுத்துகிறது

கேரட் மற்றும் ஆப்பிள் சாறு

புதிய கேரட் மற்றும் ஆப்பிள் சாற்றில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை இரண்டின் சாற்றையும் ஒன்றாகக் குடிப்பது நுரையீரலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைகிறது

இஞ்சி டீ

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சுவாச தசைகளை தளர்த்தவும், ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு சில புதிய இஞ்சி துண்டுகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்

அதிமதுரம்

அதிமதுரம் வேர் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும்,இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. உலர்ந்த அதிமதுரத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, வெதுப்பான நீரில் குடிக்க வேண்டும். இது மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது

குறிப்பு

இந்த இயற்கையான பானங்களின் உதவியுடன் ஆஸ்துமாவை குணப்படுத்தலாம். ஆனால், இது மருத்துவ சிகிச்சை அல்ல. எனவே இதை சுகாதார வழங்குநரை அணுகிய பிறகு பயன்படுத்த வேண்டும்