பற்களில் உள்ள மஞ்சள் கரை அசிங்கமா இருக்கா? சூப்பரான இந்த பொருள்களை பயன்படுத்துங்க.

By Gowthami Subramani
11 Dec 2023, 19:54 IST

பற்கள் பார்க்கும் போது முத்து போல பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகும். ஆனால், சில காரணங்களால் பற்களில் மஞ்சள் நிறக் கறைகள் தோன்றலாம்

வீட்டு வைத்தியம்

இந்த மஞ்சள் கறைகளைப் போக்க ஆற்றல் வாய்ந்த சில மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். இயற்கையான மற்றும் ஆபத்தான இரசாயங்களுக்குப் பதிலாக இயற்கைப் பொருளைப் பயன்படுத்தி மஞ்சள் கறைகளை நீக்கலாம்

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பற்களின் மஞ்சள் கறையை நீக்கி, வெண்மையாக மாற்ற உதவுகிறது. இதற்கு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள மாலிக் அமிலமே காரணமாகும். இவை பற்களின் எனாமல் மேல் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி வெண்மையாக மாற்றுகிறது

பால் பொருள்கள்

மஞ்சள் நிறக் கறைகளை நீக்க பால் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பால் பொருள்களில் உள்ள அதிகப்படியான லக்டிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவுகிறது

பழத்தோல்கள்

ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம், வாழைப்பழம் போன்ற சில பழங்களின் தோல், பற்களின் மஞ்சள் நிறக் கறைகளை நீக்க உதவுகிறது. இதற்கு தோலில் உள்ள சிட்ரிக் அமிலமே காரணமாகும்

அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழம் இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறைகளை நீக்கி, வெண்மையாக மாற்ற உதவுகிறது. இதற்கு அன்னாச்சிப்பழத்தில் உள்ள ப்ரோமெலெய்ன் என்ற என்சைம்களே காரணமாகும்

பப்பாளி

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க பப்பாளி உதவுகிறது. பப்பாளி காயில் உள்ள பைபன் மற்றும் ஹைமோபைபன் போன்ற என்சைம்கள் பற்களை வெண்மையாக்க உதவுகிறது