அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுவது மெனோராஜியா என்றழைக்கப்படுகிறது. இந்த கடுமையான மாதவிடாய் ஓட்டத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்
இலவங்கப்பட்டை
இதில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது அதிக இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இலவங்கப்பட்டையை உணவில் சேர்க்கலாம் அல்லது இலவங்கப்பட்டை தேநீராக எடுத்துக் கொள்ளலாம்
இஞ்சி டீ
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது அதிகப்படியான மாதவிடாய் ஓட்டத்தை குறைக்க உதவுகிறது. இதற்கு புதிய இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம்
வைட்டமின் சி உட்கொள்ளல்
அதிக மாதவிடாய் ஓட்டத்தை குறைக்க வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்கலாம். இது பிடிப்புகள் போன்ற மாதவிடாய் சுழற்சி அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது. வைட்டமின் சி பெற ஆரஞ்சு, ப்ரோக்கோலி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்
இரும்புச்சத்து
அதிக இரத்தப்போக்கால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இந்த இழந்த இரும்புச்சத்தை பெறவும், இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும். இதற்கு கீரை, பீன்ஸ் மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
ஆப்பிள் சைடர் வினிகர்
இது எடையிழப்புக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை தினமும் எடுத்துக் கொள்வது அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது. இதற்கு சிறிது வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்
பெருஞ்சீரக விதைகள்
இதில் எம்மெனாகோக் என்ற கலவை உள்ளது. இது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இதனை உட்கொள்வது அதிக மாதவிடாய் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது
மூலிகைகள்
சில மூலிகைகளை எடுத்துக் கொள்வது கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிக்கல்களைத் தவிர்க்க எந்தவொரு மூலிகை சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி பயன் பெறுவது நல்லது