மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இந்த தொப்பையை சில இயற்கையான முறையில் குறைக்கலாம்.
புரதம் நிறைந்த உணவுகள்
இயற்கையாக தொப்பையை குறைக்க விரும்பினால் புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சாப்பிட வேண்டும். இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
டிடாக்ஸ் பானங்கள்
தொப்பையை குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்த்து டிடாக்ஸ் பானங்களை உட்கொள்ளலாம். இது வயிற்றை சுத்தப்படுத்தி கொழுப்பை எரிக்க உதவும்.
உணவு கட்டுப்பாடு
தினசரி உணவை கட்டுப்பாடோடு சாப்பிடுங்கள். எந்த வகை உணவாக இருந்தாலும் அதை ஒரே அளவில் சரியாக சாப்பிட வேண்டும்.
மது குடிக்கக் கூடாது
ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்கும். இது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் தொப்பையை பெருமளவு அதிகரிக்கும்.
எலுமிச்சை தண்ணீர்
எடை இழப்புக்கு எலுமிச்சை நீர் குடிக்கலாம். இதை குடிப்பதால் வயிறு சுத்தமடைவதோடு பல பிரச்சனைகளில் இருந்து உடலை காப்பாற்ற முடியும்.
தோரணை முக்கியம்
தொப்பையை குறைக்க விரும்பினால் அமரும் போதும், நிற்கும் போதும் வயிற்றை உள்ளிழுத்து வையுங்கள். அதேபோல் படுக்கும் போதும். இப்படி தோரணையை பராமரிப்பதும் மிக முக்கியம்.