தலைவலி குணமாக டீ உதவும் என பலர் கூறுவார்கள், உண்மையில் அது எந்த டீ என பலருக்கும் தெரியாது. அது என்ன டீ என பார்க்கலாம்.
இஞ்சி டீ
இஞ்சி ஒரு அற்புதமான ஆயுர்வேத மூலிகையாகக் கருதப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் நிறைந்து.
கிரீன் டீ
ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எளிய மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாக கிரீன் டீ அமைகிறது.
லாவண்டர் டீ
இந்த டீயானது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்குவதில் மிகுந்த நன்மை பயப்பதாகக் கூறப்படுகிறது.
கெமோமில் டீ
கெமோமில் தேநீர் அருந்துவது ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது நரம்புகளைத் தளர்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
எலுமிச்சை டீ
சூடான எலுமிச்சை தேநீர் ஒற்றைத் தலைவலி பிரச்சனையைப் போக்க உதவும் சிறந்த தேர்வாகும். இந்த தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.