மலச்சிக்கலைச் சமாளிக்க பல்வேறு மருந்துகள் இருப்பினும், இயற்கையான அணுகுமுறையாக தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதில் மலச்சிக்கலுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்
செரிமானத்தை மேம்படுத்த
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தும் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலமாகும். இது குடலியக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கல்லைத் தவிர்க்கவும் உதவுகிறது
கொழுப்புகளை உடைக்க
கல்லீரலில் பித்தத்தை சுரக்க ஆரம்பிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இது செரிமான செயல்முறையை மேம்படுத்தவும், கொழுப்புகளை உடைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இது மலம் எளிதாக வெளியேற வழிவகுக்கிறது
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்
தேங்காய் எண்ணெய் நுகர்வு ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக குடலில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு அனுப்பப்படுகிறது
குடல் லூப்ரிகண்ட்
தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான குடல் லூப்ரிகண்ட் ஆகும். இது குடலுக்குள் மலத்தை எளிதாக இயக்க உதவுகிறது. குறிப்பாக கடினமான அல்லது வறண்ட மலம் கழிப்பவர்களுக்கு இது சாதகமாக இருக்கும்
குடல் பாக்டீரியா சமநிலைக்கு
தேங்காய் எண்ணெயின் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை ஊக்குவிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், குடலியக்கத்தை ஆதரிக்கிறது
குறிப்பு
மலச்சிக்கல்லுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிலருக்கு நன்மை தருவதாக இருப்பினும், சிலருக்கு வயிற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டால் வயிற்றுப்போக்கு, தசைப்பிடிப்பு, குமட்டல் போன்றவை ஏற்படலாம்