உங்கள் சிரிப்புக்கு மஞ்சள் பற்கள் தடையாக இருக்கா? உங்கள் பற்களை வெள்ளையாக்குவதற்கான சில இயற்கை குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வேம்பு
பல் துலக்க வேம்பு கிளைகளைப் பயன்படுத்தவும். அவற்றை பயன்படுத்துவது பற்களை பராமரிக்க , வெண்மையாக்க பெரிதும் உதவும்.
ஆயில் புல்லிங்
வாயில் எண்ணெய் சேர்த்து எல்லா பக்கமும் சுழற்றுவது ஆயில் புல்லிங் எனப்படும். இது வாயின் தசைகளுக்கு பயிற்சி அளிக்கிறது, அதன் மூலம் பற்களை வலுப்படுத்தி, டோனிங் செய்கிறது.
பல் துலக்கவும்
தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் பற்களை வெள்ளையாக்க உதவுகிறது.
பேக்கிங் சோடா
பற்களை சுத்தப்படுத்தவும், பளபளப்பாகவும் பேக்கிங் சோடா பயன்படுத்தவும். இது பற்களை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, பாக்டீரியாவை அகற்றவும் உதவுகிறது.
உப்பு
அரை டீஸ்பூன் உப்பு கொண்டு பற்களை துலக்கினால், பற்களில் படிந்துள்ள கறைகள் நீங்கும்.