குழந்தைகளால் பேசமுடியாத காரணத்தினால், தங்கள் பிரச்சினைகளை யாரிடமும் பகிர முடியாது. குழந்தைகளின் சிறுநீர் பிரச்சனையை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்.
அதிக சிறுநீர் கழிப்பது எப்படி பிரச்சனைக்கு காரணமாக இருக்குமோ, அதே போல், குழந்தை குறைவாக சிறுநீர் கழிப்பதும் பிரச்சனையை குறிக்கிறது.
சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் வெளியேறாதபோது குழந்தையின் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
குழந்தையின் உடலில் நீர் பற்றாக்குறை இருந்தாலும் நீரிழப்பு பிரச்சனை ஏற்படலாம். எனவே நேரத்திற்கு தண்ணீர் குடுக்க வேண்டியது முக்கியம்.
அதேபோல் ஒரு குழந்தை வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது பிற நோய்களால் நீரிழப்புடன் இருக்கும்போது சிறுநீர் கழிப்பதில்லை. எனவே இதற்கான வைத்தியத்தை முதலில் எடுக்கவும்.
உங்கள் பிள்ளையால் சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், முதலில் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது மிக முக்கியம்.