பேனிக் அட்டாக் ஏற்பட காரணங்கள் உள்ளன. குறிப்பாக இரவு நேரத்தில் பலரும் பேனிக் அட்டாக் ஏற்பட்டு அச்சுறுகின்றனர். இதில் இரவில் ஏற்படும் பேனிக் அட்டாக்கை தவிர்க்க உதவும் குறிப்புகளைக் காணலாம்
சுவாசத்தில் கவனம்
மூக்கின் வழியாக மெதுவாகவும் ஆழமாகவும் உள்ளிழுக்க முயற்சிக்க வேண்டும். பிறகு வாய் வழியாக மெதுவாக சுவாசிக்க வேண்டும். மூச்சை நன்கு உள்ளிழுத்து சுவாசிப்பதன் மூலம் பேனிக் அட்டாக்கை நிர்வகிக்கலாம்
தசைகளை தளர்த்துதல்
பேனிக் அட்டாக் ஏற்படும் போது ஓரிடத்தில் இருக்காமல், கைகள் மற்றும் கால்களை செயல்பட வைக்குமாறு தசை தளர்வு பயிற்சிகளை செய்யலாம்
நேர்மறை எண்ணங்கள்
மனதை எப்போதும் நேர்மறை எண்ணங்களின் மீது கவனம் செலுத்துமாறு வைக்க வேண்டும். ஏனெனில், எதிர்மறை எண்ணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், பேனிக் அட்டாக்கிற்கு காரணமாகிறது
நிலைநிறுத்துவது
இந்த நிலை ஏற்படும் போது ஒருவர் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உணர வேண்டும். மென்மையாக ஒன்றைத் தொடுவது, அரவணைப்பது போன்றவற்றை முயற்சி செய்யலாம்
மின்னணு சாதனங்களைத் தவிர்த்தல்
இரவில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு மூளையைத் தூண்டி தூங்குவதை கடினமாக்கலாம். இது தூக்கத்தைப் பாதிப்பது பேனிக் அட்டாக் ஏற்படவும் காரணமாகிறது
நிலையான தூக்கம்
ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்க முயற்சிக்க வேண்டும். மேலும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்