பல் ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எனினும் இதைத் தடுத்து நிறுத்த பல்வேறு வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்
உப்பு நீரில் கொப்பளித்தல்
வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயைக் கொப்பளிக்கும் போது, பாக்டீரியா குறைக்கப்பட்டு குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது
சரியான பல் துலக்குதல்
உணர்திறன் ஈறுகள் உள்ளவர்கள் மென்மையான அல்லது உணர்திறன் கொண்ட பல் துலக்குதலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் ஈறுகளின் இரத்தக்கசிவைத் தடுக்கலாம்
துணி வைப்பது
உடலில் மற்ற இடத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்துவதற்கு துணியைப் பயன்படுத்துவது போல, ஈறுகளிலும் ஈரமான துணியை வைத்து இரத்தப்போக்கை நிறுத்தலாம்
மஞ்சள் பேஸ்ட்
மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவைத் தடுக்க உதவுகிறது
ஆயில் புல்லிங்
தேங்காய் எண்ணெய் போன்ற பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட எண்ணெயைப் பயன்படுத்தில் வாயைச் சுற்றிக் கழுவுவது பிளேக் அளவைக் குறைத்து, வாயிலிருந்து பாக்டீரியாவை அகற்றுகிறது
இலை கீரைகள் சாப்பிடுதல்
கீரைகளில் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. இது இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. வைட்டமின் கே குறைபாடு உள்ளவர்களுக்கு இரத்தப்போக்கு நிறுத்த நீண்ட நேரம் எடுக்கலாம். எனவே வைட்டமின் கே நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது