பல்வேறு காரணங்களால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். இதனை குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவலாம். இது குறித்து இங்கே காண்போம்.
ஆலிவ் எண்ணெய்
இரவு தூங்கும் முன் ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தை ஹைட்ரேட் செய்து இறுக்கமாக்குகிறது.
தக்காளி சாறு
தக்காளி ஒரு இயற்கையான டோனராக செயல்படுகிறது. இது முக சுருக்கங்களை குறைத்து, சருமத்தை பொலிவாக்குகிறது. இதற்கு தக்காளி சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து காய்ந்ததும் கழுவ வேண்டும்.
முல்தானி மிட்டி
முல்தானி மிட்டியில் ரோஸ் வாட்டர் அல்லது தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இப்போது முகம் மற்றும் கழுத்தில் தடவி, காய்ந்த பிறகு கழுவவும். இது சருமத்தை இறுக்கி பொலிவாக்கும்.
பப்பாளி விழுது
பப்பாளியில் ஏராளமான ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சருமத்தை இறுக்கமாக்கி, பளபளப்பாக்கும். இதற்கு பப்பாளியை அரைத்து அதில் அரிசி மாவு கலக்கவும். இப்போது இதைக் கொண்டு ஸ்கரப் செய்து 15 நிமிடம் கழித்து கழுவவும்.
காபி ஸ்க்ரப்
முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்க காபி ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதற்கு, சூடான தேங்காய் எண்ணெயில் 1 கப் பழுப்பு சர்க்கரை, 1 கப் காபி தூள் மற்றும் 2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலக்கவும். இதை தொடர்ந்து உங்கள் முகத்தை ஸ்க்ரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.