தினந்தோறும் கண்ணாடி அணிவதன் காரணமாக மூக்கில் தழும்புகள் ஏற்படுவதை பலரும் சந்திப்பர். எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் தழும்புகளை மறையச் செய்யலாம். மேலும் இது சருமம் புத்துணர்ச்சி அடைய உதவுகிறது
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் குளிர்ச்சி மிகுந்த பொருளாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தழும்புகளில் புதிய கற்றாழை ஜெல்லைப் பூசி காலையில் கழுவி விடலாம். இதைத் தொடர்ந்து தடவுவதன் மூலம் தழும்பின் நிறமி குறைகிறது
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் நிறைந்திருப்பதால் இது இயற்கையான ப்ளீச் ஆக செயல்படுகிறது. பருத்தி துணியைப் பயன்படுத்தி நீர்த்த எலுமிச்சை சாற்றை புள்ளிகளில் தடவி, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவி விடலாம். உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்
உருளைக்கிழங்கு துண்டுகள்
உருளைக்கிழங்கில் இயற்கையாகவே ப்ளீச்சிங் பொருட்கள் உள்ளது. எனவே கருமையைக் குறைக்கும் வகையில், தழும்புகளில் மெல்லிய உருளைக்கிழங்கு துண்டுகளை தினமும் 15-20 நிமிடங்கள் வைக்கலாம்
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், இவை சருமத்தை ஈரப்பதமாக்கி குணப்படுத்துகிறது. சிறந்த நன்மைகளைப் பெற, இரவில் சில துளிகள் தேங்காய் எண்ணெயை தழும்புகளின் மீது மசாஜ் செய்து காலையில் கழுவலாம்
வெள்ளரிக்காய் துண்டுகள்
இது சருமத்தை அமைதிப்படுத்தி ஒளிரச் செய்ய உதவுகிறது. இதற்கு பாதிக்கப்பட்ட பகுதியில் வெள்ளரிக்காய் துண்டுகளை தினமும் 15 நிமிடங்கள் தடவுவது சருமத்தை ஆற்றவும் ஒளிரச் செய்யவும் உதவுகிறது
குறிப்பு
இந்த இயற்கை வைத்தியங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கண்ணாடி அடையாளங்களை கணிசமாகக் குறைக்கலாம். எனினும், எந்தவொரு புதிய சிகிச்சையை முயற்சிக்கும் முன்பாக ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. தேவைப்பட்டால் ஒரு தோல் மருத்துவரை அணுகி பயன்பெறலாம்