காதில் படிந்துள்ள அழுக்குகளை நீக்க சிம்பிள் வீட்டு வைத்தியங்கள் இதோ.

By Gowthami Subramani
12 Jan 2024, 17:21 IST

காது மெழுகு காரணமாக பலரும் காது வலியால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்படாவிட்டால், தலை மற்றும் வாயைச் சுற்றியுள்ள பகுதிக்கும் வலி நீடிக்கலாம். இந்த காதுகளில் சேரும் அழுக்கை நீக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

வெதுவெதுப்பான நீர்

காதுகளைச் சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீரை உபயோகிக்கலாம். வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, பருத்தியின் உதவியுடன் காதில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து காதில் இருந்து பருத்தியை வெளியே எடுத்து விடலாம்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை சூடாக்கி அதை காதில் வைக்கலாம். இதன் மூலம் காதில் குவிந்துள்ள மெழுகு அடுக்கை அகற்றலாம். இது காதில் எந்த வித தொற்றையும் ஏற்படுத்தாது

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா காதுகளை சுத்தம் செய்வதுடன், காது துர்நாற்றத்தை நீக்கவும் உதவுகிறது. இதற்கு இரண்டு ஸ்பூன் நீரில் 4 சிட்டிகை பேக்கிங் சோடா கலந்து கரைசலை தயாரிக்கவும். இதன் சில துளிகளை காதில் சேர்ப்பது காது சுத்தமாகும்

பூண்டு எண்ணெய்

காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்க பூண்டினை எடுத்துக் கொள்ளலாம். இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இந்நிலையில் காதில் பூண்டு எண்ணெயை வைப்பது, காதில் தேங்கியிருக்கும் மெழுகை நீக்கி பூஞ்சை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது

கடுகு மற்றும் தேங்காய் எண்ணெய்

காதுகளைச் சுத்தம் செய்வதற்கு கடுகு அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். இதற்கு இந்த எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றில் பூண்டு சேர்த்து சூடாக்கி வெதுவெதுப்பான பிறகு சில துளிகள் காதில் சேர்க்கலாம்

ஆப்பிள் சைடர் வினிகர்

காதுகளை சுத்தம் செய்ய ஆப்பிள் சைடர் வினிகர் பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் நீரில் சிறிது வினிகரை சேர்த்து, அதில் சில துளிகள் காதில் சேர்க்க வேண்டும்

வெங்காய சாறு

வெங்காயத்தில் பல்வேறு பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை காதில் உள்ள மெழுகுகளை அகற்ற உதவுகிறது. இதற்கு வெங்காயத்தை வதக்கி அதன் சாற்றை எடுத்து, அதில் சில துளிகளை காதுக்குள் போட வேண்டும்

காதுகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். எனினும், இந்த மருந்துகளைப் பயன்படுத்தும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்