உடலில் உள்ள முடிகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?

By Ishvarya Gurumurthy G
29 Jul 2024, 11:30 IST

உடலில் உள்ள முடிகளை அகற்ற ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா.? இனி அப்படி செய்யாதீர்கள். உடலில் உள்ள முடிகளை அகற்றை இதை செய்யவும்.

ஓட்ஸ்

பழுத்த வாழைப்பழ பேஸ்டில் ஓட்மீலை நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

வால்நட்

வால்நட் ஓடுகளை பொடி செய்து கொள்ளவும். இப்போது அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து உடலில் தடவவும். பிறகு மசாஜ் செய்யவும்.

தவிடு

புதிய பாலுடன் தவிடு கலந்து பேஸ்ட் செய்யவும். அதை தோலில் தடவவும். சிறிது காய்ந்ததும் தேய்க்கவும்.

சர்க்கரை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலவையை வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சமைக்கவும். சிறிது ஆறிய பிறகு மெழுகாக பயன்படுத்தவும்.

பப்பாளி

உடலில் உள்ள முடிகளை நீக்க பப்பாளியை தடவலாம். அதை மசித்து ஒரு சிட்டிகையுடன் லேசாக கலக்கவும். பின்னர் அதை தடவி 20 முதல் 25 நிமிடங்கள் விடவும். இப்போது அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதைப் பயன்படுத்த வேண்டாம்.