கழுத்தை சுற்றி உள்ள கருமையை நீக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இங்கே. இதன் பயனை முழுமையாக பெற இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறவும்.
ஓட்ஸ்
ஓட்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை சுத்தப்படுத்தவும் ஈரப்பதமாக்கவும் உதவுகின்றன. ஓட்ஸ் கருமையான கழுத்து தோலை ஒளிரச் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு தோல்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கழுத்து கருமையை ஏற்படுத்தும் டைரோசின் கலவைக்கு எதிராக போராடுகிறது.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைரோசினுக்கு எதிராக போராடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கற்றாழை
கற்றாழை சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. சருமத்தை ஒளிரச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இது கழுத்தில் உள்ள கருமை நீங்கும்.
காபி தூள்
காபி தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், டயர்சினை தடுத்து கழுத்தை கருமையாக மாற்றுவதில் இருந்து தடுக்கிறது.
கடலை மாவு
அழகு பராமரிப்பில் கடலை மாவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கொண்டைக்கடலை மாவு சருமத்தை மென்மையாக்க உதவுகிறது, சருமத்தை சுத்தப்படுத்துகிறது.