கால்களில் வீக்கம் ஏற்படுவதற்கு காயம், உணவுப்பழக்கம் போன்றவையே காரணமாகும். கர்ப்ப காலங்களில் பெண்கள் இந்த பிரச்சனையை மேற்கொள்வர். கால்களில் வீக்கம் உண்டாவதைத் தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது
ஐஸ் பேக்
காயம் காரணமாக பாதம் மற்றும் கணுக்காலில் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம். இல்லையெனில் குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்க வேண்டும்
கால்களை உயர்த்தி வைப்பது
உட்காரும் போது அல்லது படுக்கும் போது கால்களை சற்று உயர்த்தி வைப்பது அதன் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இரவு தூங்கும் நேரத்தில் கால்களை மார்பின் அளவுக்கு உயரே உயர்த்தி வைப்பது நல்லது
தண்ணீர் குடிப்பது
போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் கால் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கலாம். எனவே போதுமான அளவு நீர் அருந்துவதன் மூலம் வீக்கம் ஏற்படுவதைக் குறைக்கலாம்
எலுமிச்சைச் சாறு
உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் மற்றும் அளவுக்கு அதிகமான திரவங்களை நீக்க எலுமிச்சைச் சாற்றை எடுத்துக் கொள்ளலாம். இதைத் தினமும் குடித்து வர நல்ல மாற்றத்தை உணரலாம்
கல்லுப்பு பயன்பாடு
வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு சேர்த்து அதில் காலை ஊறவைப்பதன் மூலம் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கலாம். எனினும், காயம் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு இந்த முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
உப்பைக் குறைப்பது
உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைப்பது உடலில் திரவம் தேங்குவதை தவிர்க்கும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதனுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது
மதுவைக் குறைப்பது
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது உடலில் உள்ள நீரை வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கலாம். எனவே மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். எனினும் மது அருந்துவதை நிறுத்திய பிறகு 2 நாள்கள் கடந்தும் வீக்கம் இருந்தால் மருத்துவரை அணுகலாம்
கால்களுக்கு மசாஜ்
கால் வீக்கத்தைக் குறைக்க உதவும் எளிய முறையாக கால்களுக்கு மசாஜ் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வது கால்களில் தேங்கியுள்ள திரவத்தை அகலச் செய்து வீக்கத்தைக் குறைக்கிறது