தொப்பையை குறைக்க சூப்பர் வீட்டு வைத்தியம்.!

By Ishvarya Gurumurthy G
09 Apr 2024, 15:30 IST

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவும், சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதனை படித்து பயன் பெறவும்.

முழு தானிய உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்வது, உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், தொப்பையை குறைக்க உதவுகிறது.

எலுமிச்சை நீர்

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைச் சேர்த்துக் கொள்வது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

சீரகத் தண்ணீர்

வெறும் வயிற்றில் இந்நீரை அருந்துவது செரிமான மேம்பாட்டிற்கு உதவுவதுடன், வயிறு வீக்கம் அடைவதை அகற்ற உதவுகிறது. மேலும், இது தொப்பை கொழுப்பை அகற்ற பயனுள்ள முறையாகும்.

யோகா

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை, உடலில் கார்டிசோல் என்ற கொழுப்பைத் தூண்டும் ஹார்மோன்களை உண்டாக்குகிறது. இதனை தடுக்க யோகா உதவலாம்.