மழைக்காலத்தில் தேங்கும் நீரில் உருவாகும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கள் டைபாய்டு, காலரா, டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்கள் உருவாகின்றன. என்னென்ன வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்
சுத்தமான குடிநீர்
குடிக்கும் நீர், சமைப்பதற்குப் பயன்படுத்துவதற்கு சுத்திகரித்த நீரைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் குழாய் நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பாதுகாப்பானது அல்ல
கொசுக்களை விரட்டுதல்
மழைக்காலங்களில் கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவுகிறது. எனவே கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன் அல்லது சமைப்பதற்கு முன்னதாக நன்கு கழுவ வேண்டும். உணவு சமைக்க பயன்படுத்தப்படும் நீர் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
தனிப்பட்ட சுகாதார பராமரிப்பு
நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க தனிப்பட்ட சுகாதாரத்தை கடைபிடிப்பது அவசியமாகும். குறிப்பாக, வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் போது அல்லது விலங்குகள், தாவரங்களைத் தொட்ட பிறகு கைகளில் சோப்பு போட்டு கழுவுவது அவசியமாகும்
சுகாதார பராமரிப்பு
வீடுகள் மற்றும் பொது இடங்களில் சரியான மற்றும் சுத்தமான சுகாதாரத்தை பராமரிப்பது அவசியமாகும். கழிப்பறை பயன்பாட்டிற்குப் பின் ஃப்ளஷ் செய்வதை உறுதி படுத்துவது, கழிப்பறையை சுத்தம் செய்ய நல்ல கிருமி நாசினியைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்
தடுப்பூசி செலுத்துவது
பல்வேறு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கவும் உதவுகிறது