தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் பலரும் முன்கூட்டிய முதுமை பிரச்சனையை சந்திக்கிறார்கள். இதை தடுக்க உதவும் சிறந்த பழக்கங்களை பார்க்கலாம்.
வயதான அறிகுறிகளை நிறுத்த முடியாது, அவை இயற்கையானவை. ஆனால் முன்கூட்டிய முதுமையை நிறுத்தலாம்.
மோசமான சூழல்
காற்று, ஒலி மாசுபாடு உணர்ச்சி உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும், ஆஸ்துமா, சுவாச நோய்கள், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். உடலில் முன்கூட்டிய வயதானதாக மாற்றும்.
தடுப்பூசி மற்றும் மருத்துவ பரிசோதனை
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாமல், அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமல் இருந்தால், நீங்கள் முன்கூட்டிய முதுமைக்கு ஆளாக நேரிடும்.
நீங்கள் விஷயங்களை மறக்க ஆரம்பித்திருந்தால், காலத்திற்கு முன்பே முதுமையை நோக்கி நகர்கிறீர்கள் என அர்த்தம். உடல் செயல்பாடு மற்றும் மனதை சுறுசுறுப்பாக வைக்கவும்.
உடற்பயிற்சி செய்யாமை உடலில் கொழுப்பின் சதவீதத்தை அதிகரிக்கும். கொழுப்பின் அளவு அதிகரிப்பதால், நீங்கள் வேகமாக தொய்வு நிலையை அடைவீர்கள்.