ஒற்றைத் தலைவலியை எவ்வாறு தடுப்பது?

By Karthick M
02 Aug 2024, 14:08 IST

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதில் ஒன்று ஒற்றைத் தலைவலி பிரச்சனை.

மைக்ரேன் பிரச்சனை என்ன?

ஒற்றைத் தலைவலி ஒரு நரம்பியல் கோளாறு. இதில் தலையில் பாதி பகுதியில் கடும் வலியை ஏற்படுத்தும். இந்த வலி சிறிது நேரம் அல்லது சில நாட்கள் நீடிக்கும்.

ஒற்றைத் தலைவலியாக இருந்தால் உங்கள் தலையை லேசாக மசாஜ் செய்யவும். குளிர்ச்சியான ஐஸ் கட்டிகளை தடவவும். ஒரு நாளைக்கு குறைந்தது 12 முதல் 14 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

நெய் நன்மை

மைக்ரேன் வலியை தவிர்க்க நெய் உதவியாக இருக்கும். இதில் உள்ள கூடுதல் பிட்டாவை உடலிலும் மனதிலும் சமநிலைப்படுத்த உதவும்.

இலவங்கப்பட்டை மற்றும் கற்பூரம்

இலங்கப்பட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அல்லது கற்பூரத்தை பொடி செய்து தேசி நெய் கலந்து இந்த பேஸ்ட்டை நெற்றியில் தடவலாம்.