இரத்தக் கட்டிகளைத் தடுப்பது ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆழமான நரம்பு இரத்த உறைவு மற்றும் நுரையீரல் தக்கையடைப்பு போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் இரத்தக் கட்டிகளைத் தடுப்பதற்கான குறிப்புகளைக் காணலாம்
உடற்பயிற்சி
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் குறைந்த 150 நிமிடங்கள் மிதமான தீவிரச் செயல்பாடுகளைப் பெற முயற்சிக்கலாம்
ஆரோக்கியமான உணவு
நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். மேலும் பூண்டு, வெண்ணெய், பெர்ரி, மிளகாய் மற்றும் செர்ரி போன்ற சில உணவுகள் இரத்தக் கட்டிகளைத் தடுக்க உதவுகிறது
நீரேற்றமாக இருப்பது
ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் நீரிழப்பு மந்தமான இரத்த ஓட்டம் மற்றும் இரத்த உறைவுக்கு வழிவகுக்கலாம்
தளர்வான ஆடை அணிவது
தளர்வான உடைகள், காலுறைகளை அணிய வேண்டும். இறுக்கமான ஆடை அணிவதும் இரத்த உறைவை ஏற்படுத்தலாம்
கால்களை உயர்த்துதல்
உடற்பயிற்சி செய்யும் போது அல்லது சாதாரண நேரங்களில், நேரத்திற்கு ஏற்றவாறு கால்களை இதயத்திற்கு மேலே 6 அங்குலங்கள் உயர்த்த வேண்டும்
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்
இரத்த உறைவு ஏற்பட்டால் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்