சிபிஓடி பிரச்சனையை எப்படி நிர்வகிப்பது?

By Gowthami Subramani
20 Nov 2024, 14:55 IST

நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் கொண்டவர்களுக்கு சுவாசிப்பது கடினமாக இருக்கலாம். எனினும் எளிமையான சில வாழ்க்கை முறையை நிர்வகிப்பதன் மூலம், வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது

ஆரோக்கியமான உடல் எடை

அதிக எடையுடன் இருப்பதால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், சிஓபிடியை மோசமாக்குகிறது. சீரான உணவின் மூலம் எடையை நிர்வகிக்கலாம். இதன் மூலம் ஸ்லீப் மூச்சுத்திணறல் மற்றும் GERD போன்ற அபாயங்களைக் குறைக்கலாம்

சுறுசுறுப்பாக இருப்பது

COPD உடற்பயிற்சியை கடினமாக்கலாம். ஆனால், சுறுசுறுப்பாக இருப்பது மூச்சுத் திணறலை எளிதாக்கலாம். எனவே நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க நடைபயிற்சி, நீச்சல் போன்ற குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை முயற்சிக்கலாம்

சுவாசப் பயிற்சி செய்வது

சுவாச நுட்பங்களின் உதவியுடன் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வைக் குறைக்கலாம். இவை நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

புகைபிடிப்பதை தவிர்ப்பது

புகைபிடித்தல் சிஓபிடியின் முக்கிய காரணமாகும். எனவே புகைபிடிப்பதை நிறுத்துவது அல்லது புகைபிடிப்பதைத் தவிர்ப்பது நுரையீரலை மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

சிஓபிடியை நிர்வகிப்பதில் மன ஆரோக்கியம் முக்கியமானதாகும். ஏனெனில், பதட்டம், மன அழுத்தம் போன்றவை சிஓபிடி அறிகுறிகளை மோசமாக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சிஓபிடி உள்ளிட்ட பல நோய்களிலிருந்து விடுபடலாம்