சளி, இருமலுக்கு அருமருந்து... ஓமம், பூண்டு ஆயில் தயாரிப்பது எப்படி?

By Kanimozhi Pannerselvam
16 Jan 2024, 10:23 IST

தேவையான பொருட்கள்

1 கப் ஓமம், 1 கப் உரித்து நசுக்கிய பூண்டு, 2 கப் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்

செய்முறை

அடிகனமான பாத்திரத்தில் நன்றாக சலித்து எடுக்கப்பட்ட ஓமம் மற்றும் நசுக்கப்பட்ட பூண்டு பற்களை ஒரு கப் கடுகு அல்லது நல்லெண்ணெயில் கலந்து சூடாக்கவும்.

எண்ணெய் தயார்

பூண்டு மற்றும் ஓமத்தை குறைந்த வெப்பத்தில் எண்ணெயில் ஊற்ற அனுமதிக்கவும். பூண்டு தங்க பழுப்பு நிறமாக மாறும் வரை இந்த செய்முறையை தொடரவும்.

வடிகட்டுதல்

எண்ணெய் தயார் ஆனதும், அறை வெப்பநிலைக்கு குளிர வைக்கவும். இதனை நன்றாக வடிகட்டி,பூண்டு மற்றும் ஓமத்தை அகற்றவும்.

சேகரிப்பு

இந்த எண்ணெய்யை கண்ணாடி அல்லது இறுக்கமான மூடியுள்ள பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு சளி, இருமல் போன்ற நொந்தரவு ஏற்படும் போது பயன்படுத்தலாம்.