வயிறை குளிர்ச்சியாக்க வழிகள்
கோடையில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகம் வரும். இந்த காலக்கட்டத்தில் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம். இதற்கான வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தர்பூசணி
வயிற்று உஷ்ணத்தை தணிக்க தர்பூசணி சாப்பிடுவது நல்லது. இதில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து குறையாது.
கரும்புச்சாறு
கரும்புச்சாறு குடிப்பதால் வயிறு குளிர்ச்சியாகவும், உடலில் நீர்ச்சத்தும் அப்படியே இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளக்கூடாது.
இளநீர்
உடலை குளிர்விக்க இளநீர் குடிக்கலாம். இது உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது. இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
தயிர் மற்றும் மோர்
உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உங்கள் வயிற்றை குளிர்விக்கவும் தயிர் சாப்பிடலாம். ஆனால் இரவில் தயிர் சாப்பிடக் கூடாது, இது சளி, இருமலை அதிகரிக்கும். அதேபோல் ஆரோக்கியமான பாக்டீரியாவை ஊக்குவிக்கும் மோர் குடிக்கலாம்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
வயிறு தொடர்பான பிரச்சனையை போக்க இந்த அனைத்து உணவு வகைகளையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்.