தவறான வாழ்க்கை முறை வைட்டமின் குறைபாடு கால்சியம் குறைபாடு போன்ற காரணங்களால் முழங்கால்களில் உள்ளே வலி ஏற்படலாம்.
முழங்காலிலிருந்து வெடிக்கும் சத்தம் வரத் தொடங்கலாம். இதனால் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. முழங்கால் வலியை எப்போதும் புறக்கணிக்கவேக் கூடாது.
முழங்கால் வலியை குறைக்க பச்சை காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதில் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு வலிமை தருவதுடன், இரத்த சோகை பிரச்சனையை நீக்குகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை உட்கொள்வதால் எலும்பு பலவீனத்தை நீக்கலாம்.
உடல் பலவீனத்தை நீக்க முதலில் 10 முதல் 15 மக்கானாவை ஒரு கிளாஸ் பாலில் கொதிக்க வைத்து தொடர்ந்து சாப்பிடலாம்.
ஒரு அத்திப்பழத்தை 1 கிளாஸ் பாலில் வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு பலத்தைத் தரும். இது முழங்கால் வலியை நீக்கும்.
ஜங்க் ஃபுட் உள்ளிட்ட உணவுகள் உண்பதை தவிர்த்து நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் உள் எலும்பு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.