தீராத பல்வலியால் அவதியா? இந்த ரெமிடிஸ் யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
29 Sep 2024, 14:10 IST

இன்று பலரும் சில காரணங்களால் பல்வலியால் அவதியுறுகின்றனர். பற்சிதைவு, ஈறு நோய், தாடை அல்லது பற்களில் தொற்று போன்றவை ஏற்படலாம். இதில் பல்வலியைக் குணமாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

கிராம்பு எண்ணெய்

பல்வலி நிவாரணத்திற்கான மிகவும் பிரபலமானதீர்வுகளில் ஒன்று கிராம்பு எண்ணெய் ஆகும். பொதுவாக கிராம்புகளில் யூஜெனோல் உள்ளது. இது இயற்கையான, பாக்டீரியா எதிர்ப்பு முகவராக செயல்பட்டு வலியைக் குரைக்க உதவுகிறது

ஐஸ் பேக்

பல்வலிக்கு ஐஸ் பேக் ஒரு சிறந்த தேர்வாகும். இது வலியை உண்டாக்கும் நரம்புகளை மரத்துப்போகச் செய்து, வலியிலிருந்து குறுகிய கால நிவாரணத்தைத் தருகிறது

கொய்யா இலைகள்

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பல்வலிக்கு சிறந்த மருந்தாக அமைகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாவைக் கொன்று, பல்வலி மற்றும் ஈறு பிரச்சனைகளைக் குறைக்கிறது

மஞ்சள்

இதன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் பல்வலிக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இது வீக்கத்தின் அளவைக் குறைத்து நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது

பெருங்காயம்

ஆயுர்வேதத்தில் பல்வலி மற்றும் ஈறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெருங்காயம் சிறந்த தேர்வாகும். இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் பல் வலியைத் தணிக்க உதவுகிறது

உப்பு நீர் கொப்பளிப்பு

பல் வலிக்கு மற்றும் தொற்று நோயைக் குறைக்க உதவும் எளிய, பயனுள்ள வழியாக உப்பு நீர் கொப்பளிப்பு அமைகிறது. இது பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கிறது