தொண்டை வலியை விரைவில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்

By Gowthami Subramani
20 Sep 2024, 08:30 IST

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டான்சில் தொற்று ஏற்படலாம். இதனால் தொண்டை புண், விழுங்குவதில் சிரமம், சுரப்பிகள் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது

வீட்டு வைத்தியம்

டான்சில் தொற்றிலிருந்து விடுபட சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது. இதில் டான்சில் குணமாக உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

சூடான தண்ணீர்

தொண்டை வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எளிய மற்றும் சிறந்த வைத்தியமாக சூடான தண்ணீரை அருந்தலாம்

இஞ்சி

இஞ்சி சாறுடன் தேன் கலந்து உட்கொள்வதன் மூலம் டான்சில் பிரச்சனைகளிலிருந்து நிவாரணத்தைப் பெறலாம்

துளசி

துளசி இலையில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. துளசி தேநீர் அருந்துவதன் மூலம் டான்சிலைக் குறைக்கலாம்

மஞ்சள் பால்

வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குடிப்பது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கிறது

எலுமிச்சைப்பழம்

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும். இது நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகிறது

கருமிளகு

தொண்டையில் ஏற்படும் தொற்றைக் குணமாக்க கருமிளகுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும்

வாயைக் கொப்பளிப்பது

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாயைக் கொப்பளிப்பது டான்சில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது