முகம் கருமையை நீக்க வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே போதும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்று இங்கே காண்போம்.
என்னதான் சருமத்தை பாதுகாக்க நாம் பல வழிகளை மேற்கொண்டாலும், அடிக்கும் வெயிலில் எல்லாம் போய்விடும். வெயிலில் சருமம் கருக்காமல் இருக்க வீட்டில் உள்ள பொருட்கள் போதும். இதை வைத்து என்ன செய்யலாம் என்று இங்கே காண்போம்.
தயிர்
வெயிலால் ஏற்படும் கருமையை நீக்க தயிர் தடவினால் போதும். இது சில நாள்களில் டான்-ஐ நீக்குகிறது. தயிரில் புரோட்டீன், வைட்டமின் டி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே பிரகாசிக்க செய்யும்.
எலுமிச்சை
சன் டேனுக்கு எலுமிச்சை ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும். இதில் சக்தி வாய்ந்த இயற்கையான ப்ளீச்சிங் ஏஜெண்ட் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி உள்ளது. இது உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். மேலும் எலுமிச்சை உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்ததால் ஏற்படும் சேதத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
சந்தனம்
சந்தனம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை காக்க இது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். சருமத்தில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க சந்தனம் அழிக்கும். இது வெயிலால் ஏற்படும் கருமையை நீக்குகிறது.
பப்பாளி
சன் டானுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக பப்பாளி திகழ்கிறது. இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை காக்க உதவுகிறது. இது வெயிலால் ஏற்படும் கருமையை நீக்குகிறது.
ஆரஞ்சு
சன் டானுக்கு எளிமையான வீட்டு வைத்தியம் ஆரஞ்சு. இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை சரிசெய்யவும், பிரகாசிக்கவும் செய்யும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவும். மேலும் இது வெயிலினால் உண்டாகும் கருமையை போக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு
இயற்கையான சன் டான் தீர்வாக உருளைக்கிழங்கு திகழ்கிறது. இது சருமத்தை சேதப்படுத்தாமல் காக்கிறது. இது டி - டானிங் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கு சாறு உங்கள் சருமத்தை அழகாக்கவும், புத்துயிர் பெறவும் செய்கிறது.
கற்றாழை
கற்றாழை சருமத்திற்கு நன்மை பயக்கும். இது உங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது. உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், கருமையை நீக்கவும் உதவுகிறது.
வெள்ளரி
வெள்ளரிக்காய் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி1 உள்ளது. இது முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இது வெயிலால் ஏற்படும் கருமையை நீக்குகிறது.