வயிற்று புழுக்களை நீக்க உதவும் உணவுகள்.!

By Ishvarya Gurumurthy G
25 Feb 2024, 23:20 IST

வயிற்றில் உள்ள புழுக்களை எப்படி நீக்குவது என்று வழி தேடுகிறீர்களா? இந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதும்.!

துளசி

வயிற்றில் புழுக்கள் இருந்தால், துளசியால் செய்யப்பட்ட டீ குடிக்கலாம். துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வயிற்றுப் புழுக்களை நீக்குவதற்கு ஏற்றது.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிற்றை சுத்தமாக வைக்க உதவும். இது வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க உதவுகிறது.

மாதுளை பழம்

மாதுளை பழத்தில் நார்ச்சத்து, கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட்ஸ் மற்றும் ரிபோஃப்ளேவின் நிறைந்துள்ளன. இது வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது வயிற்றுப் புழுக்களை அகற்றும்.

ஓமம்

ஓமத்தில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன. இது பூச்சிகளை அழிக்க உதவியாக இருக்கும்.

கிராம்பு

கிராம்பு நீரை குடிப்பதால் வயிற்றுப் புழு பிரச்னையிலிருந்து விடுபடலாம். கிராம்பில் வைட்டமின்கள், ஜின்க், தாமிரம், செலீனியம், தையமின், உவர்மம், மங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.