உங்களுக்கு வயிறு உப்புசம் இருக்கிறதா? இதில் இருந்து நீங்கள் விடுபட, நாங்கள் உங்களுக்கு சில ரெசிபிகளை சொல்கிறோம். ட்ரை பண்ணி பாருங்க.
சீரகம் நீர்
ஒரு கப் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பின் அதை வெதுவெதுப்பான நிலையில் குடிக்கவேண்டும். இது செரிமான திறனை மேம்படுத்தும்.
மஞ்சள் பால்
ஒரு கப் சூடான பாலில், கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கவும். இது வயிறு உப்புசத்தை நீக்கும்.
சீரக மோர்
சீரகத்தை நன்கு வறுத்து தூள் ஆக்கிக்கொள்ளவும். இந்த சீரக தூளை ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு கப் மோருடன் கலந்து குடிக்கவும். இதில் உள்ள புரோபயாட்டிக், செரிமானத்தை மேம்படுத்தும்.
ஓம தண்ணீர்
ஒரு டீஸ்பூன் ஓம விதைகளை, அரை கப் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதை வடிகட்டி குடிக்கவும். இது வயிறு உப்புசத்தை சரிசெய்யும்.