வியர்க்குருவை விரட்ட அருமையான வீட்டு வைத்தியம்

By Ishvarya Gurumurthy G
26 Apr 2024, 08:30 IST

கோடை வெயில் தாக்கத்தால் அதிகம் வியர்க்கிறது. இதனால் வியர்க்குரு ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க எளிமையான வீட்டு வைத்தியம் இங்கே.

வெயிலில் நாம் வெளியே சென்று வந்தால், குளித்து விட்டு வருவது போல், வியர்வையால் நனைந்திருப்போம். இதனால் வியர்க்குரு ஏற்படுகிறது. இது குத்தும் உணர்வை அளிக்கும். இதில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவலாம். அவை என்னவென்று அறிய பதிவை ஸ்வைப் செய்யவும்.

சந்தனம்

வியர்க்குருவுக்கு சந்தனம் சிறந்த தீர்வாக இருக்கும். குளிக்கும் முன் 20 நிமிடங்களுக்கு சந்தனத்தை உடலில் பூசி ஊறவைக்கவும். இது குளிர்ச்சியை அளிக்கும். சந்தனம் ஊறிய பின் குளிக்கவும். இதனால் வியர்க்குரு நீங்கும்.

கஸ்தூரி மஞ்சள்

உடல் குளிச்சியில் கஸ்தூரி மஞ்சள் நல்ல பங்கு வகிக்கிறது. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சளை உடலில் தேய்த்து குளித்தால் வியர்க்குரு நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், சருமம் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. வேப்பிலையை சுத்தம் செய்து, நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை உடலில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊற விடவும். பின்னர் குளிக்கவும். இதனால் வியர்க்குரு நீங்கும்.

பாசிப் பயிறு

தோல் சார்த்த பிரச்னைகளை நீக்கவும், இயற்கையான ஸ்க்ரப்பராகவும் பாசிப் பயிறு திகழ்கிறது. இது சருமத்தை பளபளப்பாகவும், வியர்க்குருவை நீக்கவும் உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் இதை அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை உடலில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் குளித்து வந்தால், வியர்க்குரு நீங்கும்.

உணவுகள்

உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, கிர்ணி, வெள்ளரிக்காய், இளநீர் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

திரிபலா

இரவு படுக்கைக்கு செல்லும் முன் திரிபலா பொடியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும். அல்லது இந்த பொடியை பயன்படுத்தி குளிக்கவும். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால் வியர்க்குரு நீங்கும்.